தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு


UPDATED : நவ 28, 2014 12:00 AM

ADDED : நவ 28, 2014 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2014 12:00 AM ADDED : நவ 28, 2014 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு டிச., 27ம் தேதி நடக்கிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின்(என்.எம்.எம்.எஸ்) கீழ் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு படிப்பு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வு டிச., 27ம் தேதி நடக்கிறது.

இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை டிச., 4ம் தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி: அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல், 2013-14ம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி. / எஸ்.டி., மாணவ, மாணவியர் 50 சதவீதம் மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீதம் மதிப்பெண்களும் அல்லது அதற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை டிச.,4ம் தேதிக்குள் www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை மாணவர்களிடம் வழங்கி பெற்றோர் உதவியுடன் பூர்த்திசெய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் 50 ரூபாயுடன் டிச., 5ம் தேதிக்குள் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர், செந்திவேல்முருகன் கூறியதாவது: இத்தேர்வில் தேர்ச்சி பெறும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூ. 500 படிப்பு உதவித்தொகையாக வழங்கப்படும். இத்தொகை, பிளஸ் 2 வரை அவர்களுக்கு வழங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us