மிகுந்த பயனளித்தது ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி: மாணவர்கள் மகிழ்ச்சி
மிகுந்த பயனளித்தது ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி: மாணவர்கள் மகிழ்ச்சி
UPDATED : நவ 30, 2014 12:00 AM
ADDED : நவ 30, 2014 11:57 AM
விருதுநகர்: தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் மிகுந்த பயனுள்ளதாக, தேர்வு எழுதும் எங்களுக்கு பெரும் ஊக்கத்தை தந்ததாக, விருதுநகரில் நடந்த நிகழ்சியில் பங்கேற்ற 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
பி.அபிராமி (10ம் வகுப்பு,ஷத்திரிய மகளிர் மேல்நிலை பள்ளி, விருதுநகர்): தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஒரு மார்க் கேள்விகளின் முக்கியத்துவம், அதை எவ்வாறு தவறவிடாமல் இருப்பது, பதட்டமின்றி தேர்வை எழுதுவது போன்ற கருத்துகள் தேர்வுக்கு தயாராவதற்கு ஊக்கப்படுத்துவதாக அமைந்தது.
எஸ்.பெருமாள் சாமி(10ம் வகுப்பு, அரசு மேல்நிலை பள்ளி, ஆமத்தூர்): பயப்படாமல் தேர்வை எழுதும் முறை, அதிக மார்க் பெற எவ்வாறு படிக்க வேண்டும். முக்கிய வினாக்கள், எவ்வாறு எளிதில் விடையளிப்பது போன்ற கருத்துக்கள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. தன்னம்பிக்கை கருத்துகள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.சுபேதா (பிளஸ் 2, லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி, நாமக்கல்): ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகள், அதிக மார்க் பெறுவதற்கான முறைகள்,தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
எஸ். சூரஜ்குமார்( பிளஸ் 2, கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்): முக்கிய வினாக்கள், அதிக மார்க் பெறுவதற்கான வழிமுறைகள், ஆங்கிலம், வேதியியல் பாடங்களை எவ்வாறு படிக்க வேண்டும், தேர்வை எதிர் கொள்வதற்கான தன்னம்பிக்கை கருத்துகள் மிகுந்த உற்சாகமளிக்கிறது.
பி.ஆன்டனி லியோ ( பிளஸ் 2 ,ஆர்.சி. மேல்நிலை பள்ளி, விருதுநகர்): பயமின்றி தேர்வை எதிர்கொள்ளும் முறைகள், புக் பேக் கேள்விகளின் முக்கியத்துவம், கணிதம், ஆங்கிலம், பாடங்களில் எவ்வாறு அதிக மார்க் பெறுவதற்கான வழிமுறைகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
