UPDATED : டிச 01, 2014 12:00 AM
ADDED : டிச 01, 2014 10:25 AM
அ நிறம் | அளவு
அசம்கார்: கல்வியால் தான் முஸ்லிம்கள் முன்னேற முடியும்; எனவே, முஸ்லிம்கள் அதிக அளவில் கல்வி கற்க வேண்டும், என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ரபி ஹஸ்ஸானி நத்வி கூறினார்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் அசம்கார் நகரில், நேற்று முன்தினம் நடைபெற்ற முஸ்லிம் சர்வதேச கருத்தரங்கில், நத்வி இவ்வாறு பேசினார்.
மேலும் அவர், "சமுதாயம் பின்னடைந்துள்ளதற்கு காரணம், போதிய கல்வியறிவு இல்லாததே; முஸ்லிம் சமுதாயத்தின் முந்தைய தலைவர்கள், கல்வியறிவில் சிறந்திருந்தது போல, இந்த சமுதாயமும் சிறக்க வேண்டும்" என்றார்.
