தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

தினமலர் அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

தினமலர் அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை


UPDATED : டிச 01, 2014 12:00 AM

ADDED : டிச 01, 2014 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2014 12:00 AM ADDED : டிச 01, 2014 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நடந்த தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ, மாணவியர் அதிகாலையில் குவிந்தனர்.

டி.வி.ஆர்., அகாடமி சார்பில் தினமலர், கல்விமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழா நிகழ்ச்சி, திருக்கோவிலூர் சுப்ரமணிய மகாலில் நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 5:00 மணியிலிருந்து மாணவ, மாணவியர் குவிந்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க கூடிய வகையில் தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டது.

தமிழ்பாடத்திற்கு தஞ்சை மாவட்டம் பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஆங்கில பாடத்திற்கு ராம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி, கணிதப் பாடத்திற்கு சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன் கருந்துரை வழங்கினர்.

அறிவியல் பாடத்திற்கு புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் குலசேகரன், சமூக அறிவியல் பாடத்திற்கு புதுச்சேரி தமிழ்த்தென்றல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் டாக்டர் அமலோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் இடையில் கேட்கப்பட்ட கேள்விக்களுக்கு பதிலளித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், குறிப்பேடு, பேனா, மாதிரிவினா-விடை, உடம்பும் மனுசும் நல்லா இருக்கணும் உள்ளிட்ட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கடந்தாண்டு நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாலுகா அளவில் தலா 490 மதிப்பெண்கள் எடுத்த திருக்கோவிலூர் அங்கவை சங்கவை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வாரிஸ்ரீ, பிரித்தி ஆகியோருக்கு, பேரூராட்சி தலைவர் தேவிமுருகன் தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்கி பாராட்டினார்.

பின்னர் தேவிமுருகன் பேசுகையில், "தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன். கல்விச்சேவையில் அர்ப்பணித்துக் கொண்டு மாணவ, மாணவியருக்கு ஜெயித்துக்காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவ, மாணவியர் இதை நன்கு பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us