ஈடுபாடும், தன்னம்பிக்கையும் இருந்தால் அதிக மார்க்: ஜெயித்துக்காட்டுவோமில் அறிவுரை
ஈடுபாடும், தன்னம்பிக்கையும் இருந்தால் அதிக மார்க்: ஜெயித்துக்காட்டுவோமில் அறிவுரை
UPDATED : டிச 01, 2014 12:00 AM
ADDED : டிச 01, 2014 12:54 PM
அருப்புக்கோட்டை: படிப்பில் ஈடுபாடும், தன்னம்பிக்கையும் இருந்தால் பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறலாம் என, அருப்புக்கோட்டையில் நடந்த தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
தினமலர் டி.வி.ஆர்.,அகாடமி மற்றும் கல்வி மலர் சார்பில் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது. ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். தினமலர் சார்பில் இலவச மாதிரி வினா-விடை, உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறிய அறிவுரைகள்: எம்.பி. ராஜேந்திரன் (ஆங்கிலம், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை): ஆங்கிலம் முதல் தாளில் கிராமர் 30 மார்க்குகளுக்கான கேள்விகளின் பதில்களை திரும்ப, திரும்ப செய்து பார்க்க வேண்டும். கடைசி 20 மார்க் கேள்விகள் மிக எளிதானவை.
மனப்பாட பகுதிகளில் கிடைக்கும் மார்க்குகள், அதிக மார்க் பெற வழி வகுக்கும். ஆங்கிலம் இரண்டாம் தாளில் முதல் 35 மார்க் சப்ளிமென்ட் ரீடர் நன்றாக படித்தால், அதிக மார்க் பெறலாம். லெட்டர், கின்ட் டெவெலப்பிங்க், சம்மரி ரைட்டிங், ரோடு மேப் படவிளக்கம் கண்டிப்பாக எழுத வேண்டும்.
ஏ. சரவணன், (கணிதம், தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை): ஒரு மார்க் கணக்குகளுக்கு 2,3,5,6,7 பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 1,3,4,5, 7 பகுதிகளில் குறைவான கணக்குகளை பார்த்தாலே 2 மார்க் கேள்விகளுக்கு விடையளிக்கலாம். முதல் 5 பாடங்களை படித்தாலே 5 மார்க் கேள்விகளில் 10 கணக்குகள் செய்யலாம்.
தேற்றம், கனஅளவு கணக்குகள், வாளி கணக்குகளை பார்த்து கொள்ள வேண்டும். 15 சூத்திர கணக்குகளை பார்த்து 5 கணக்குகளை எழுதினாலே 15 மார்க் பெற்று விடலாம். 10 மார்க் கணக்குகளான கிராப்பில் 12.3 பகுதி கணக்குகளையும், ஜியோமிதி கணக்குகளை 3 பிரிவுகளாக பார்த்து பயிற்சி எடுத்து கொண்டால் 100 மார்க் எழுதில் பெறலாம்.
ஜி. காயத்ரி, (அறிவியல், தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ,அருப்புக்கோட்டை): 1,2,4,7,19,13,15,17 பாடங்களில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். 2 மார்க் கேள்விகளை கவனமாக தேர்வு செய்து எழுத வேண்டும். முதலில் தெரிந்த வினாக்களை தேர்வு செய்து பின்னர் அனைத்து கேள்விகளுக்கு விடையளித்தால் 100 மார்க் பெறலாம். படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் 1,2,3,4,7,8,9,10,15 ஆகிய பாடங்களில் மதிப்பீடு கேள்விகள் படித்தாலே எளிதில் தேர்ச்சி பெறலாம். மதிப்பீடு பாட கேள்விகள் அனைத்தையும் படித்தாலே 50 மார்க் பெறலாம்.
எம்.பி. சித்ராதேவி (சமூக அறிவியல், எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை): ஒரு மார்க் கேள்விகள் முழுவதை கவனமாக படித்தால் 33 மார்க் பெறலாம். 1905 முதல் 1950 வரையிலான காலக்கோடுகளை படித்து கொள்ள வேண்டும். வரைபடத்தில் வரலாறில் ஆசியா மட்டும் படித்தாலே முழு மார்க் பெறலாம். புவியியலில் மலைகள், ஆறுகள், மண் வகை காடுகள், பருவகாற்றுகள், சென்னை முதல் டில்லி ரயில்பாதை, பயிர்கள், நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். பொருளியலில் பாடம் 1, குடிமையியலில் பாடம் 1, படித்தால் கண்டிப்பாக 14 மார்க் பெறலாம். புவியியலில் 1முதல் 5ம் பாடம் வரை படித்தால் 13 மார்க் பெறலாம். படிப்பில் ஈடுபடு, தன்னம்பிக்கை இருந்தால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.
பிளஸ் 2மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறப்பட்ட அறிவுரைகள்
பி.எஸ். முத்துராமலிங்கம், (ஆங்கிலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பந்தல்குடி): ஒவ்வொரு பாடத்தின் பின் உள்ள ஸ்கில்ஸ் வெகாப்பிலரி இலக்கண பகுதிகளை விடாமல் தயார் செய்தால், அதிக மார்க்குகள் பெறலாம். கடந்த ஏழு ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் உள்ள சினானிமஸ், ஆன்டனிமஸ் தயார் செய்தாலே முழு மார்க் பெறலாம்.
முதல் தாளில் உள்ள லெக்சிகல் வினாவிற்கு எளிதான வாக்கிய அமைப்புகள் உள்ளன. அப்ளிகேஷன் கடிதத்தில் முழு மார்க் கிடைக்கும். பயோடேட்டா சரியாக எழுதினாலேயே பாதி மார்க் கிடைத்துவிடும். போயம் , poet பெயர் எழுதினால் இரண்டு மார்க் கிடைக்கும். சம்மரி எழுதும் போது தலைப்பு, ரப்,பேர் காப்பிகள் எழுதினாலே மூன்று மார்க் கிடைக்கும். ஜெனரல் எஸ்சே கேள்வியில் சயின்ஸ், மை ஆம்பிஷன், ரோல் ஆப்வுமன் ஆகியவற்றில் ஒரு essay வரும்.
எஸ்.எம்.ஷேக் மஹபூப் (கணிதம், எஸ்.கே.வி.,மேல்நிலை பள்ளி, பாப்பநாயக்கன்பட்டி): புளூ பிரிண்ட் படி, பாடத்திற்கு பின் பக்க 271 வினாக்களில் எவ்வித மாற்றமுமின்றி 30 வினாக்கள் கேட்கப்படுகிறது. இதனால் அவைகளை மீண்டும் மீண்டும் படித்தால் 30 மார்க் பெறலாம். வெக்டர் இயற்கணிதம் பாடத்தில் இரு ஒரு மார்க் கேள்விகளும், வகை நுண்கணிதம் பயன்பாடுகள் 2 பாடத்திலிருந்து 1ம் மற்ற பாடங்களிலிருந்து 10 கேள்விகளும் கேட்கப்படும்.
200 மார்க் பெற 381 வினாக்களையும் படிக்க வேண்டும். எடுத்துக் காட்டு கணக்குகளிலிருந்து 102 மார்க் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் மூன்று பாடங்களிலிருந்து 90 மார்க் கேள்விகள் கேட்கப்படுவதால் அந்த பாடங்களை படித்தால் யாரும் தோல்வியடைய தேவையில்லை.
பி.முத்துக்குமார், (இயற்பியல், தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை): மெல்ல கற்கும் மாணவர்கள் 1,2,7, 8 பாடங்களை படித்து, எழுதி பார்க்க வேண்டும். 10, 5 மார்க் கேள்விகளுக்கு கட்டாயம் படம் வரைந்து விளக்கமும் எழுத வேண்டும். கணக்கீடுகளுக்கு இடையில் வார்த்தைகள் தேவையில்லை. 150 மார்க்குகளுக்கும் பதில் எழுத வேண்டும்.
அதிக மார்க் எடுக்கும் மாணவர்கள் தீர்க்கப்பட்ட கணக்குகள், பயிற்சி கணக்குகளை செய்து பார்த்தாலேயே போதுமானது. கேள்விகளுக்கு தலைப்பிட்டு விடையளிக்க வேண்டும். 10 மார்க் கேள்விகளை 10 நிமிடத்திலும், 5 மார்க் கேள்விகளுக்கு 5 நிமிடத்திலும், 3 மார்க் கேள்விகளை 3 நிமிடத்திலும், 1 மார்க் கேள்விகளை 20 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும். படம் வரைந்து அடிக்கடி பார்த்து கொள்ள வேண்டும். பண்புகள், பயன்கள் படித்து கொள்ள வேண்டும்.
கே.பாலமுருகன், (வேதியியல், சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி அருப்புக்கோட்டை): சமன்பாடுகளை அதிக முறை எழுதி பார்க்க வேண்டும். புத்தகத்திற்கு பின்னால் இருக்க கூடிய ஒரு மார்க் வினாக்களிலிருந்து குறைந்தபட்சம் 18 மார்க் பெற்று விடலாம். மின் வேதியியல், ஹைட்ராக்சி வழிப் பொருள்கள், கார்போனைல் சேர்மங்கள், கரிம நைட்ரஜன் சேர்மங்கள் பாடங்களை தவிர மற்ற பாடங்கள் அனைத்தையும் படித்தால் 139 மார்க் பெறலாம். புக் பேக் ஒரு மார்க் கேள்விகள், கரிம வேதியியிலில் கணக்குள், கரிம நைட்ரஜன் சேர்மங்கள் முழுவதும் படித்தாலும் முழு மார்க் பெறலாம்.
டாக்டர். எஸ்.ஏ. சாதலி (தன்னம்பிக்கை): ஆர்வத்துடன் எதையும் செய்தால் எளிதில் சாதிக்கலாம். சிந்தனைகளை சிதறடிக்கும் டிவி, விளையாட்டு போன்றவைகளை மறந்து விடவும். நட்டு, வீட்டு சூழ்நிலை, தேவையில்லாத இடர்பாடுகளை களைந்து, மனதை ஒருமுகப்படுத்த கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டும். மூன்று மணி நேரம் படித்தது அரை மணி நேரம் டிவி பார்த்தால் படித்தது மறந்து விடும். படித்தை மனதில் நிறுத்தி கொள்ளும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
