பல்கலை தடகள போட்டியில் பங்கேற்க கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
பல்கலை தடகள போட்டியில் பங்கேற்க கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : டிச 03, 2014 12:00 AM
ADDED : டிச 03, 2014 12:11 PM
அ நிறம் | அளவு
சேத்துபட்டு: பல்கலை தடகள போட்டியில் பங்கேற்க, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை சார்பில், அதன், உடற்கல்வியியல் துறை நடத்தும், 47வது, பல்கலை தடகள போட்டி, நேரு விளையாட்டு அரங்கில், டிச.21ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
அதில், பங்கேற்க விரும்பும் கல்லுாரி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க, டிச. 8ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு, 94433 01699 என்ற, அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
