1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த சாயல்குடி வாலிபர்
1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த சாயல்குடி வாலிபர்
UPDATED : டிச 04, 2014 12:00 AM
ADDED : டிச 04, 2014 12:19 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: மகாராஷ்டிராவில், ’தேசிய ரூரல் பெடரேஷன் ஆப் இந்தியா’ சார்பில் நடந்த 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், சாயல்குடி வாலிபர் செல்வம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம், சாயல்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம், 22. மதுரை அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் கடந்த நவ., 21 முதல் 23 வரை, 4 வது தேசிய அளவிலான ரூரல் பெடரேஷன் இந்தியா சார்பில் நடந்த 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார் அதில், முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். அடுத்து 2015, ஜனவரியில் டில்லியில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
