தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெற்றோருக்கு தெரிவிக்காமல் பள்ளிக்கு விடுமுறை அளித்ததை கண்டித்து போரட்டம்

பெற்றோருக்கு தெரிவிக்காமல் பள்ளிக்கு விடுமுறை அளித்ததை கண்டித்து போரட்டம்

பெற்றோருக்கு தெரிவிக்காமல் பள்ளிக்கு விடுமுறை அளித்ததை கண்டித்து போரட்டம்


UPDATED : டிச 04, 2014 12:00 AM

ADDED : டிச 04, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2014 12:00 AM ADDED : டிச 04, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பெற்றோருக்கு தெரிவிக்காமல், பள்ளிக்கு விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, பள்ளி வளாகத்தில், பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மந்தைவெளி, தெற்கு கனால் பங்க் சாலையில், ஒரு தனியார் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, மூவாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 1ம் தேதி, பள்ளியில் பெற்றோர் தினம் கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. இதை அடுத்து, நேற்று முன்தினம் எந்த முன் அறிவிப்பும் இன்றி, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி வழக்கம் போல் செயல்படுவதாக நினைத்த பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பணிக்கு சென்று விட்டனர்.

இதனால், மாணவர்கள் பலர் வீடு திரும்ப முடியாமல், சிரமத்திற்கு ஆளாகினர். இதை அறிந்த பெற்றோர் நேற்று காலை, பள்ளி வளாகத்தில் திரண்டு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதை அடுத்து விடுமுறை குறித்து, பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டதாகவும், சரியான அலைபேசி எண்ணை தராதவர்களுக்கு, தகவல் வராமல் இருந்திருக்கலாம் எனவும், பள்ளி தாளாளர் நளினி தெரிவித்தார். எனினும், பெற்றோர் அதை ஏற்காமல் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: பள்ளியில் நடப்பது குறித்து, பத்திரிகைகள், போலீசுக்கு தெரிவிக்க மாட்டேன் என, படிவத்தில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளனர். எங்கள் குழந்தைகளுக்கு, மாற்று சான்றிதழ் தருவதாகக் கூறி, தொடர்ந்து மிரட்டி வருவதால், இங்கு நடக்கும் அட்டூழியம் குறித்து வெளியே சொல்ல முடியவில்லை. போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பள்ளியில் அடிக்கடி ஆசிரியர்கள் மாற்றப்படுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us