தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில வாலிபால் போட்டி; சபர்பன் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாமிடம்

மாநில வாலிபால் போட்டி; சபர்பன் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாமிடம்

மாநில வாலிபால் போட்டி; சபர்பன் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாமிடம்


UPDATED : டிச 04, 2014 12:00 AM

ADDED : டிச 04, 2014 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2014 12:00 AM ADDED : டிச 04, 2014 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநில வாலிபால் போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழக விடுதியில் தங்கிப் படிக்கும் சபர்பன் பள்ளி மாணவர்கள், இரண்டாமிடம் பெற்றனர்.

பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி விளையாட்டுத் துறையின் சார்பில், நான்காவது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால், கூடைப்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகள் நடந்தன. லீக் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றிய அணிகள், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

வாலிபால் முதல் அரையிறுதிப் போட்டியில், திருநெல்வேலி புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி அணியினர், 25:23, 25:16, 25:18 என்ற நேர் செட்களில், கம்பம் சி.பி.யு., மேல்நிலைப்பள்ளி அணியினரை வென்றனர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழக விடுதியில் தங்கிப் படிக்கும் சபர்பன் பள்ளி மாணவர்கள் அணியும், வைத்தீஸ்வரன் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில், சபர்பன் பள்ளி அணியினர், 25:18, 25:14, 25:17 என்ற நேர் செட்களில் வைத்தீஸ்வரன் அணியை வென்று, இறுதிப் போட்டியில் நுழைந்தனர்.

இறுதிப் போட்டியில், சபர்பன் அணி இரண்டாவது இடம் பிடித்தது. அணியினரையும், பயிற்சியாளர் சுரேந்திரனையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை மண்டல முதுநிலை மேலாளர் ராஜ மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவர் ஸ்டான்லி மேத்யூ ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us