தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுமா?

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுமா?

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுமா?


UPDATED : டிச 04, 2014 12:00 AM

ADDED : டிச 04, 2014 01:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2014 12:00 AM ADDED : டிச 04, 2014 01:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: நீலகிரி மாவட்டத்தை தொடர்ந்து, திருப்பூரிலும் ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் ஞாயிறுறன்றும் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. காலாண்டு தேர்வில், மாணவர்களின் மதிப்பெண் குறைந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியை தொடர்ந்து, திருப்பூரிலும் ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, கல்வி ஆர்வலர்கள் இடையே எழுந்துள்ளது. அருகில் உள்ள கோவை, ஈரோடு மாவட்டங்களை விட பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், திருப்பூர் பின்தங்கியுள்ளது. இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஞாயிறு தினங்களில் வகுப்பு நடத்துவது, அதிக மதிப்பெண் பெற உதவும்.

இது குறித்து குமார் நகர் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரனிடம் கேட்டபோது, “பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, திங்கள் முதல் வெள்ளி வரை, காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் கூடுதலாக வகுப்பு நடத்தப்படுகிறது. சனிக்கிழமை பகல் 3.00 மணி வரை வகுப்பு நடக்கிறது.

ஆசிரியர்களுக்கு ஆர்வம் இருந்தால், கல்வித்துறை அனுமதியுடன் ஞாயிறு தினத்திலும் வகுப்பு நடத்தலாம்.“இதற்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம். கடந்தாண்டு, புதுராமகிருஷ்ணாபுரம் பள்ளியில், இதுபோல் இரண்டு மாதங்களுக்கு ஞாயிறு தினங்களில் வகுப்பு நடத்தினோம். அது, 100 சதவீத தேர்ச்சிக்கு உதவியது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us