தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஆணையம் அமைக்க நடவடிக்கை: ரங்கசாமி

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஆணையம் அமைக்க நடவடிக்கை: ரங்கசாமி

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஆணையம் அமைக்க நடவடிக்கை: ரங்கசாமி


UPDATED : டிச 04, 2014 12:00 AM

ADDED : டிச 04, 2014 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2014 12:00 AM ADDED : டிச 04, 2014 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ’மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று முதல்வர் ரங்கசாமி பேசினார்.

கம்பன் கலை அரங்கத்தில் நேற்று நடந்த, மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

புதுச்சேரியிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கையே, அரசுத்துறையில் 3 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான். தற்போது புதுச்சேரியில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுத் துறைகளில் 1.8 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.2 சதவீதம் பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

மீன்வளம், போலீஸ், மின் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, நூறு ரூபாய் உயர்த்தி விரைவில் வழங்கப்படும்.

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த உடன், ஆணையம் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்கும் 18 ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிதி நிலையை கருத்தில் கொண்டு, அசலை தள்ளுபடி செய்வதா, வட்டியை தள்ளுபடி செய்வதா என முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us