தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருப்பூரில் டிச., 6ல் துவங்குகிறது ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி

திருப்பூரில் டிச., 6ல் துவங்குகிறது ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி

திருப்பூரில் டிச., 6ல் துவங்குகிறது ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி


UPDATED : டிச 04, 2014 12:00 AM

ADDED : டிச 04, 2014 01:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2014 12:00 AM ADDED : டிச 04, 2014 01:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும், தினமலர் கல்விமலர் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி வரும் 6ம் தேதி, திருப்பூரில் துவங்குகிறது.

‘தினமலர்’ நாளிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை தைரியமாக எதிர்கொள்ளும் வகையில், அற்புதமான ஆலோசனைகள் வழங்கும் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ என்ற நிகழ்ச்சியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த அக்., 25ல் பல்லடத்திலும், 26ல் அவிநாசியிலும், ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் பகுதி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் வரும் 6ம் தேதி, மங்கலம் ரோடு எஸ்.ஆர்., நகரில் உள்ள குமரன் மகளிர் கல்லூரியில் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி துவங்குகிறது.

‘தினமலர்’ நாளிதழுடன் நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், புரபஷனல் எஜூகேஷனல் டிரஸ்ட், ஆர்.வி. எஸ்., கல்வி குழுமங்கள் இணைந்து வழங்குகின்றன. வரும் 6ம் தேதி காலை 9.00 மணிக்கு, பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கும்; மதியம் 1.00 மணிக்கு, ஆங்கில வழி மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

டிச., 7ம் தேதி காலை, பிளஸ் 2 சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கும்; மதியம் 1.00 மணிக்கு ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களுக்கும், ‘ஜெயித்துக்காட்டு வோம்’ நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களை பயிற்றுவிப்பதில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் பங்கேற்று, பொதுத்தேர்வில் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பகுதிகள், முழு மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள், படித்ததை நினைவில் கொள்ளுதல், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது குறித்து, ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

மேலும், பொதுத்தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், மாதிரி வினாத்தாள் அடங்கிய புளூபிரின்ட் புத்தகம்; தன்னம்பிக்கை புத்தகங்கள், ‘தினமலர்’ சார்பில் இலவசமாக வழங்கப்படும்.

‘தினமலர்’ நாளிதழ் நடத்தும் இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்று, ஆசிரியர்கள் தரும் அறிவுரைகளை பின்பற்றி, பொதுத்தேர்வில் சாதித்து காட்ட வேண்டும். மாணவர்கள், தங்கள் அடையாள அட்டையுடன், பள்ளி சீருடை அணிந்து, நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us