UPDATED : டிச 05, 2014 12:00 AM
ADDED : டிச 05, 2014 11:03 AM
அ நிறம் | அளவு
சோழிங்கநல்லுார்: கல்லுாரி அளவிலான கால்பந்து போட்டியில், இந்துஸ்தான், லயோலா அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், சென்னை கால்பந்து சங்கம் ஆதரவுடன், கல்லுாரி அளவிலான கால்பந்து போட்டி, சென்னையில் நடந்து வருகிறது. அதில், இந்துஸ்தான் அணி, 3-1 என்ற கோல் கணக்கில், ஜேப்பியார் பொறியியல் கல்லுாரியை வென்றது.
லயோலா அணி, 2-1 என்ற கோல் கணக்கில், சத்யபாமா பல்கலை அணியை தோற்கடித்தது. எஸ்.ஆர்.எம்., ப்ளூ அணியும், எம்.சி.சி., அணியும் மோதிய ஆட்டம், சமனில் முடிந்தது.
