தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிசம்பர் 6, 7ம் தேதிகளில் திருப்பூரில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!

டிசம்பர் 6, 7ம் தேதிகளில் திருப்பூரில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!

டிசம்பர் 6, 7ம் தேதிகளில் திருப்பூரில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!


UPDATED : டிச 05, 2014 12:00 AM

ADDED : டிச 05, 2014 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2014 12:00 AM ADDED : டிச 05, 2014 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செய்திகளை உள்ளது உள்ளபடி, உடனுக்குடன் வழங்கும், தினமலர் நாளிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள, ஆண்டுதோறும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

திருப்பூர் பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில், நடப்பாண்டுக்கான நிகழ்ச்சி, மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் மகளிர் கல்லூரியில், நாளையும் (டிச., 6 ), நாளை மறுதினமும் (டிச., 7) நடத்தப்படுகிறது.

நாளை காலை 9.00 மணிக்கு துவங்கும் பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். தமிழ் - பங்கஜம், ஆங்கிலம் - மெஹர்நிஷா, கணிதம் - பாலசுப்ரமணியம், அறிவியல் - மீனலோசனி; சமூக அறிவியல் பாடம் குறித்து நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் சங்கீதா.

மதியம் 1.00 மணிக்கு துவங்கும் 10ம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், கோவை எஸ்.பி.ஓ.ஏ., ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். தமிழ் - அன்வர் பாட்ஷா, ஆங்கிலம் - ஷோபா, கணிதம் - ராமகிருஷ்ண பிரசாத், அறிவியல் (பகுதி 1) - லதா, பகுதி 2 - ஜெஸ்சி ஜேக்கப், வரலாறு - ஜெய லட்சுமி, புவியியல் பாடம் குறித்து ஜீவா செந்தில், டிப்ஸ் தருகின்றனர்.

நாளை மறுநாள் (7ல்), பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது; எஸ்.பி.ஓ.ஏ., ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்குவர். காலை 9.00 மணிக்கு துவங்கும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், தமிழ் - உமாராணி, ஆங்கிலம் - அகஸ்டின் ரவி; கணிதம் - சில்வெஸ்டர் சந்துரு; இயற்பியல் - ரவி; வேதியியல் - பரமேஸ் வரி; தாவரவியல் - நாகராஜ்; விலங்கியல் - இசைவாணி; கம்ப்யூட்டர் சயின்ஸ் - சித்ரா ஆகியோரும், மதியம் 1.00 மணிக்கு துவங்கும் கலை பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், தமிழ் - உமாராணி; ஆங்கிலம் - அகஸ்டின் ரவி; வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் - ஷோபனா; பொருளியல் - சரஸ்வதி, கம்ப்யூட்டர் சயின்ஸ் - சித்ரா; வணிக கணிதம் - சில்வெஸ்டர் சந்துரு ஆகியோர், பொதுத்தேர்வில் சாதிப்பதற்கான டிப்ஸ் வழங்குவர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, பொதுத்தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், மாதிரி வினாத்தாள் அடங்கிய புளூபிரின்ட் புத்தகம்; தன்னம்பிக்கை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்; அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us