பள்ளிக்கு அருகே ஆள்துளை கிணறு - ஆபத்தை உணராத மாணவர்கள்
பள்ளிக்கு அருகே ஆள்துளை கிணறு - ஆபத்தை உணராத மாணவர்கள்
UPDATED : டிச 05, 2014 12:00 AM
ADDED : டிச 05, 2014 01:19 PM
திருத்தணி: தொடக்கப் பள்ளி அருகே, திறந்தவெளியில் ஆழ்துளை கிணறு இருப்பதால், ஆபத்தை உணராத மாணவர்கள், அங்கு விளையாடுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்கு உட்பட்டது, தாடூர் காலனி. இங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி அருகே சாலையோரம் திறந்தவெளியில், ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை, ஊராட்சி நிர்வாகம் தற்போது பயன்படுத்தாமலும், மூடப்படாமல் உள்ளது.
இந்த, திறந்தவெளி ஆழ்துளை கிணற்று அருகில், பள்ளி மாணவர்கள் காலை, மாலை இடைவேளை நேரம் மற்றும் மதிய உணவின் போது விளையாடுகின்றனர். மேலும் சில மாணவர்கள், ஆழ்துளை கிணற்றில் கல் போட்டு தண்ணீர் உள்ளதா எனவும் பரிசோதனை செய்கின்றனர்.
சிறிய மாணவர்கள் என்பதால், ஆழ்துளை கிணற்றில் விழுந்து, அபாய நிலையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணற்றை மூடவேண்டும் அல்லது புதைக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
