தினமலர் செய்தியால் பள்ளியில் குவிக்கப்பட்ட கட்டடக் கழிவுகள் அகற்றம்
தினமலர் செய்தியால் பள்ளியில் குவிக்கப்பட்ட கட்டடக் கழிவுகள் அகற்றம்
UPDATED : டிச 06, 2014 12:00 AM
ADDED : டிச 06, 2014 12:09 PM
உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தினமலர் செய்தி எதிரொலியாக மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத வகையில் குவிக்கப்பட்டிருந்த கட்டடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
உடுமலை, குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை 60 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி வந்த சிதிலமடைந்த வகுப்பறைக் கட்டடம், குறித்து கடந்த ஜூன் மாதம் தினமலரில் செய்தி வெளியானதையடுத்து இடிக்கப்பட்டது.
அக்கட்டடக் கழிவுகள், பள்ளி வளாகத்திற்குள், வகுப்பறைக்கு அருகிலேயே குவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பள்ளி வளாகத்திற்குள் இக்கட்டடக் கழிவுகள் குவிக்கப்பட்டிருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு முழுமையடையவில்லை என கடந்த 1ம் தேதி மீண்டும் தினமலரில் செய்தி வெளியானது. இச்செய்தி எதிரொலியாக, பள்ளி வளாகத்திற்குள் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
