தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/42 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த தாமதமாக ஆணை பிறப்பித்த அரசு

42 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த தாமதமாக ஆணை பிறப்பித்த அரசு

42 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த தாமதமாக ஆணை பிறப்பித்த அரசு


UPDATED : டிச 09, 2014 12:00 AM

ADDED : டிச 09, 2014 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2014 12:00 AM ADDED : டிச 09, 2014 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு, ஒன்றரை ஆண்டுக்கு பின், 42 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கல்வி ஆண்டின் பிற்பகுதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி

கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், 110 விதியின் கீழ், தமிழகத்தில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும்; 42 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என, முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள, 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த, தமிழக அரசு, கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்று, மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்ற மாணவர்களை, திரும்ப இந்த பள்ளிகளில் சேர்க்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி, ஓராண்டு கடந்த நிலையில், நடப்பு கல்வியாண்டின் இடையே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பள்ளிகளில், ஆய்வகங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் இல்லை எனவும் புகார் எழுந்தது. இதன் காரணமாகவே, தங்கள் பிள்ளைகளை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, பெற்றோரிடையே தயக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு, சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தபடி, 16 மாதங்களுக்கு பின், 19 மாவட்டங்களில் உள்ள, 42 தொடக்கப் பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த, தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சலசலப்பு

கல்வியாண்டின் பிற்பகுதியில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெற்றோரிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், வரும் காலத்தில் கூடுதல் வகுப்பறைகளை கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு கல்வியாண்டில், வகுப்பறைகள் மற்றும் போதுமான உட்கட்டமைப்பு வசதியின்றி, மாணவர்கள் சிரமப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தரம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்ட பள்ளிகள், கடந்த ஆண்டிலேயே கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தபோது, நடப்பு கல்வியாண்டு துவங்கும் முன்பே, வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கல்வி அதிகாரிகள் மெத்தனம் காட்டியதாலே, தற்போது, கல்வியாண்டின் நடுப்பகுதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தரம் உயர்த்தப்படும் காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள்.

ஒன்றியம்  -  தரம் உயர்த்தப்பட்ட பள்ளி

ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை தொடக்கப் பள்ளி
கும்மிடிப்பூண்டி - தாரணிப்பூண்டி தொடக்கப் பள்ளி
திருத்தணி - கார்த்திகேயபுரம் தொடக்கப் பள்ளி
திருத்தணி - சிறுகுமிகாலனி தொடக்கப் பள்ளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us