தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாநில அத்தெலடிக் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாநில அத்தெலடிக் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாநில அத்தெலடிக் போட்டி


UPDATED : டிச 09, 2014 12:00 AM

ADDED : டிச 09, 2014 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2014 12:00 AM ADDED : டிச 09, 2014 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கிடையேயான, மாநில அளவிலான அத்தெலடிக் போட்டி, சேலத்தில் துவங்கியது.

சேலம், செவ்வாய்பேட்டை, ஸ்ரீவித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி சார்பில், சேலம் மஹாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் துவங்கின. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து, 125 பள்ளிகளை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு நாள் நடைபெறும் இப்போட்டியில், நேற்று நடந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர் விபரம்:

1,500 மீட்டர் ஓட்டம்(19 வயதுக்குட்பட்டோர் பிரிவு):எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவன் ஸ்ரீராம் முதலிடத்தையும், சி.எஸ்., அகாடமி மாணவன் ஜூவல் இரண்டாம் இடத்தையும், மதகொண்டபள்ளி மாதிரிப்பள்ளி மாணவன் அஜீத் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

1,500 மீட்டர் ஓட்டம்(16 வயதுக்குட்பட்டோர்):மதகொண்டபள்ளி மாதிரிப்பள்ளி மாணவன் ரவீதேஜா முதலிடத்தையும், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவன் சுஜூத் இரண்டாம் இடத்தையும், என்.டி.ஜே.ஏ., பள்ளி மாணவன் பர்வேஷ்முஸ்ரஃப் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

நீளம் தாண்டுதல்(19 வயதுக்குட்பட்டோர்): வேலம்மாள் பள்ளி மாணவன் புரந்தர் முதலிடத்தையும், சவுந்திர ராஜ வித்யாலயா மாணவன் ஹரிஹரன் இரண்டாம் இடத்தையும், மான்ஃபோர்டு மாணவன் யுகின் பிரவீன் ராஜன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

வட்டு எறிதல்(16 வயதுக்குட்பட்டோர்): அமர்தா வித்யாலயா மாணவன் முகேஸ்குமார் முதலிடத்தையும், எஸ்.ஆர்.டி.எஃப்.வி., வித்யாலயா மாணவன் அஸ்வத்குமார் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீசுவாமி இன்டர்நேஷனல் மாணவன் பிரபு மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

ஈட்டி எறிதல்(19 வயதுக்குட்பட்டோர்): அமிர்தா வித்யாலயம் மாணவன் ஜக்விந்தர் சிங் முதலிடத்தையும், விவேகானந்தா வித்யா கலா ஆஸ்ரம் மாணவன் மணிகண்டன் இரண்டாம் இடத்தையும், அதிய பித்யாஸ்ரம் மாணவன் யஸ்வந்த்குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

குண்டெறிதல்(19 வயதுக்குட்பட்டோர்): எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவன் ஜானிதாமஸ் முதலிடத்தையும், கோல சரஸ்வதி வைஸ்ணவ் பள்ளி மாணவன் ஹரிஷ் இரண்டாம் இடத்தையும், அதிய வித்யாஸ்ரம் மாணவன் வேதகுரு மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

குண்டெறிதல்(14 வயதுக்குட்பட்டோர்): சின்மயா இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் மனன் பந்தேரி முதலிடத்தையும், நாஹர் பப்ளிக்
பள்ளி மாணவன் கதிரவன் இரண்டாம் இடத்தையும், கிங்ஸ் அண்டு க்யூன்ஸ் பள்ளி மாணவன் சுதெம் முஸாரே மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

உயரம் தாண்டுதல்(19 வயதுக்குட்பட்டோர்): சவுந்திரராஜ வித்யாலா பள்ளி மாணவன் ஹரிஹரன் முதலிடத்தையும், கோலபெருமாள் செட்டி வைஸ்னவ் மாணவன் சாய் கிஷோர் இரண்டாம் இடத்தையும், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவன் ரோஹித் சடகோபன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us