தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் பயிற்சி மையங்களை நடத்துவோர் திண்டாட்டம்

தொழில் பயிற்சி மையங்களை நடத்துவோர் திண்டாட்டம்

தொழில் பயிற்சி மையங்களை நடத்துவோர் திண்டாட்டம்


UPDATED : டிச 09, 2014 12:00 AM

ADDED : டிச 09, 2014 12:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2014 12:00 AM ADDED : டிச 09, 2014 12:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த திறன் மேம்பாட்டு சிறப்பு தொழில் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், புதிய பயிற்சிகளுக்கான அறிவிப்புகள் இல்லாததாலும், தொழில் பயிற்சி மையங்களை நடத்துவோர் திண்டாட்டத்தில் உள்ளனர்.

மத்திய அரசின் எம்.இ.எஸ்., திட்டத்தில் (மாடுலர் எம்பிளாய்மென்ட் ஸ்கீம்) சார்பில் மாநில அரசினர் டி.இ.டி., (டிபார்ட்மென்ட் ஆப் எம்பிளாய்மென்ட் டிரைனிங்) இணைந்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆர்.டி.ஏ.டி., தொழில் பயிற்சி மையங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இலவச பயிற்சிகள் நடந்து வந்தன. மத்திய, மாநில அரசுகளின் இந்த திட்டத்தை நம்பி அதிக முதலீட்டில் பயிற்சி மையங்களை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கி அதன் மூலம் கிராமப்பகுதிகள் வரை இலவச பயிற்சிகளை அளித்தனர்.

இத்திட்டத்தில் பயிற்சிக்கு வரும் நபருக்கு வரும் கல்விக்கான கட்டணத் தொகையை மத்திய அரசு வழங்கும். 2011 ம் ஆண்டு வரையிலான கட்டணம்தான் இதுவரையிலும் இந்நிறுவனங்களை நடத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் பயிற்சி அளித்து, தொழில் பயிற்சி பயின்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொழில் பயிற்சி நடத்திய நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படவில்லை.

புதிய பயிற்சியை துவங்குவதற்கான அறிவிப்புகளும் இல்லாததால், இலவச தொழில் பயிற்சி அளித்த நிறுவனங்களால் பயிற்சி மையங்களை நடத்தவும் முடியாமல், பூட்டவும் முடியாமல் தவிக்கின்றனர்.

தொழில் பயிற்சி நிறுவனங்களை நடத்துவோர் கூறுகையில், "மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்டால், மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்கிறார்கள். மத்திய அரசு அதிகாரிகளிடம் இருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை. புதிய பயிற்சிகள் துவங்க மத்திய அரசு புது வழிகாட்டுதல் முறையை அறிவித்தாலும், அதை பின்பற்ற தயாராக இருக்கிறோம். ஆனால் ஏற்கனவே கொடுத்த பயிற்சிக்கான கட்டணத்தை இனியும் தாமதமின்றி இத்துறையினர் வழங்க வேண்டும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us