தினமலர் செய்தியால் புதிய கட்டடத்திற்கு மாறிய மாணவியர் விடுதி
தினமலர் செய்தியால் புதிய கட்டடத்திற்கு மாறிய மாணவியர் விடுதி
UPDATED : டிச 10, 2014 12:00 AM
ADDED : டிச 10, 2014 11:13 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட மாணவிகள் பயன்பெறும் வகையில், புல்லமடைரோடு அன்னைநகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டடம் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும், திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால், மாணவியர் விடுதி ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் உள்ள தனியார் வாடகை கட்டடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டுவந்த ஆதி திராவிட மாணவியர் விடுதி, புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
