தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இசைக் கல்லுாரியின் புதிய கட்டடம் கட்டும் பணி நிறைவு: விரைவில் வகுப்புகள் துவக்கம்

இசைக் கல்லுாரியின் புதிய கட்டடம் கட்டும் பணி நிறைவு: விரைவில் வகுப்புகள் துவக்கம்

இசைக் கல்லுாரியின் புதிய கட்டடம் கட்டும் பணி நிறைவு: விரைவில் வகுப்புகள் துவக்கம்


UPDATED : டிச 10, 2014 12:00 AM

ADDED : டிச 10, 2014 12:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2014 12:00 AM ADDED : டிச 10, 2014 12:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அரசு இசைக் கல்லுாரியின் புதிய கட்டடம் கட்டும் பணி தற்போது மலுமிச்சம்பட்டியில் நிறைவடைந்துள்ளதால், வரும் கல்வியாண்டு முதல் அங்கு வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை அரசு இசைக் கல்லுாரியியானது, கடந்த 1993ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் குரலிசை, வயலின், வீணை, பரதம் ஆகிய நான்கு படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதுதவிர, ஓராண்டு பட்டயப் படிப்பான இசை ஆசிரியர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டு முதல் குரலிசை, வயலின், வீணை ஆகிய பாடங்களில் மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தித்தரும் நோக்கில் இவ்வாண்டு துவக்கத்தில் மலுமிச்சம்பட்டியில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டது.

மொத்தம் 4.35 எக்டர் பரப்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் 20 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால், வரும் கல்வியாண்டு முதல் புதிய கட்டடத்தில் வகுப்புகள் துவங்க கல்லுாரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அரசு இசைக் கல்லுாரி முதல்வர் (பொ) லலிதாவிடம் கேட்டபோது, "தற்போது, மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் கல்லுாரி செயல்பட்டுவருகிறது; 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us