1,294 விடுதிகளுக்கு ‘இட்லி வேக வைப்பான்’ வழங்க முடிவு
1,294 விடுதிகளுக்கு ‘இட்லி வேக வைப்பான்’ வழங்க முடிவு
UPDATED : டிச 11, 2014 12:00 AM
ADDED : டிச 11, 2014 11:38 AM
அ நிறம் | அளவு
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், நடப்பு ஆண்டு 1,294 மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு, இட்லி வேக வைக்கும் பாத்திரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், விடுதிகள் நடத்தப்படுகின்றன.
இங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்க நடப்பு ஆண்டு 1,294 விடுதிகளுக்கு, இட்லி வேக வைப்பான் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இட்லி வேக வைப்பான் வழங்க, தகுதியான ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய ’டெண்டர்’ கோரப்பட்டு உள்ளது.
