தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் வன்முறை: தலைமையாசிரியை சஸ்பென்ட்

மாணவர்கள் வன்முறை: தலைமையாசிரியை சஸ்பென்ட்

மாணவர்கள் வன்முறை: தலைமையாசிரியை சஸ்பென்ட்


UPDATED : டிச 13, 2014 12:00 AM

ADDED : டிச 13, 2014 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2014 12:00 AM ADDED : டிச 13, 2014 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை, சித்தாபுதூர், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், அரையாண்டு தேர்வு நடந்தபோது, வன்முறை வெடித்தது. இருக்கைகளை உடைத்தும், தலைமை ஆசிரியர் அறையில் பட்டாசு வெடித்தும், கண்ணாடியை உடைத்தும், மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மாநகராட்சி கல்வி அலுவலரிடம், கமிஷனர் விஜய கார்த்திகேயன் விசாரித்தார். அவர் கூறியதாவது: மாணவர்கள், கூட்டாக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தாபுதூர் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாதேவி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியில், தலைமை ஆசிரியருக்கு எதிராக, சில ஆசிரியர்கள், அலுவலர்கள் செயல்பட்டு மாணவர்களை தூண்டி விட்டதாக தெரிய வந்துள்ளது. அந்த ஆசிரியர்கள், அலுவலர்களை தனித்தனியாக விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் மனநிலையை ஒழுங்குபடுத்த பயிற்சிகள் அளிக்கவும், பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

மாணவர்கள் மீது வழக்கு

பள்ளி சூறையாடப்பட்டது தொடர்பாக, மாணவர்கள் மீது, மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பொது சொத்துகளை சேதப்படுத்துதல், சட்ட விரோதமாகக் கூடுதல், அனுமதியின்றி பட்டாசு வெடித்தல் ஆகிய பிரிவுகள் அவை.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவர்களே வன்முறையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதே பள்ளியில் பணியாற்றும் சிலர், மாணவர்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். சம்பவத்தின் பின்னணியில் இருப்போர் பற்றிய விவரங்களும் திரட்டப்பட்டுள்ளன. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us