தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க சாலை மறியல்

டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க சாலை மறியல்

டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க சாலை மறியல்


UPDATED : டிச 13, 2014 12:00 AM

ADDED : டிச 13, 2014 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2014 12:00 AM ADDED : டிச 13, 2014 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: நரிக்குடி அருகே ஆசிரியரை தாக்கியதாக கூறி மாணவருக்கு டி.சி., கொடுத்ததால், அவரை பள்ளியில் சேர்க்க கோரி மற்ற மாணவர்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

நரிக்குடி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வு நடந்தது. ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர் தேர்வு குறித்தான விளக்கங்களை கூறியபோது மாணவர் ஒருவர் கேலி செய்துள்ளார். மாணவரை வெளியில் செல்லுமாறு ஆசிரியர் கூறினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆசிரியரை தாக்கியதாக கூறி வீரசோழன் போலீசில் மாணவரை ஒப்படைத்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் உத்தரவின்படி மாணவருக்கு டி.சி., வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளியில் ஆங்கிலத் தேர்வு நடந்தது. அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க கோரி மற்ற மாணவர்கள் தேர்வை புறக்கணித்து பஸ் மறியல் செய்தனர். போலீஸ், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சாகுல்ஹமீது மற்றும் அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின் மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us