UPDATED : டிச 14, 2014 12:00 AM
ADDED : டிச 14, 2014 01:45 PM
சென்னை: மனித உரிமை நாளை முன்னிட்டு, சென்னை கல்லுாரிகளில், கவிதை, கட்டுரை, கருத்தரங்கம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னையில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில், நேற்று முன்தினம் துவங்கிய மனித உரிமை நாள் விழாக்கள் நடந்தன.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லுாரியில், சமூகவியல் துறையுடன், உன்னதி தொண்டு நிறுவனம் இணைந்து, மனித உரிமை நாள் கொண்டாடப்பட்டது. அதில், கல்லுாரிகளுக்கு இடையிலான பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், பாடல், நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர், குழந்தைகளுக்கான உரிமைகள், பெண் உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகள், சமத்துவ உரிமைகள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான கேடயத்தை, இந்து கல்லுாரி மாணவர்கள் பெற்றனர்.
சென்னை, ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் மகளிர் கல்லுாரியில் நேற்று, மனித உரிமை நாள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. அதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சந்துரு, அக்பர் அலி, மற்றும் உலகின் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களும், வெளியுறவு துறை உறுப்பினர்களும் கலந்து கொண்டு, மனித உரிமைகள் பற்றி பேசிய கருத்தரங்கம் நடந்தது.மேலும், பல கல்லுாரிகளிலும், இதுபோன்ற விழாக்கள் நடைபெற்றன.
