அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்பம்
அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்பம்
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 11:40 AM
அ நிறம் | அளவு
சென்னை அரும்பாக்கத்திலும், பாளையங்கோட்டையிலும் அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.
இதில், பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபி போன்ற டிப்ளமோ படிப்புகளுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
சென்னை மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகள், திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி போன்றவற்றில், விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், வரும் 24ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
