தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன் வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ், பணியேற்பு உத்தரவு

திறன் வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ், பணியேற்பு உத்தரவு

திறன் வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ், பணியேற்பு உத்தரவு


UPDATED : டிச 16, 2014 12:00 AM

ADDED : டிச 16, 2014 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2014 12:00 AM ADDED : டிச 16, 2014 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்கள் 27 பேர், கோவையில் மூன்று மாதம் திறன் வளர்ப்பு பயிற்சி முடித்தனர். அவர்களில் 14 பேருக்கு சான்றிதழ், பணியேற்பு உத்தரவை கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார்.

மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பயின்று இடை நின்ற மாணவ, மாணவியர் 27 பேருக்கு கோவை ஐ.சி.ஐ.சி.ஐ., அகடாமி பார் ஸ்கில்ஸ் என்ற நிறுவனம் மூலம் கடந்த மூன்று மாதம் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹோம் அப்ளையன்ஸஸ், பம்ஸ் மற்றும் மோட்டார் உள்ளிட்டவற்றில் திறன் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

அதன்பின் நேர்காணல் மூலம் அவர்களுக்கு அங்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் தங்கப்பதக்கம் வென்ற உத்தண்டராமன், கார்த்தீஸ்வரன், ஜெயசந்திரன், கவுரி, கிருஷ்ணவேணி, மாரிச்செல்வம், மகாகாளிமுத்து, கணேஷ்மூர்த்தி, ராஜா, மணிச்செல்வம் உள்ளிட்ட 14 பேரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பணியேற்பு உத்தரவை, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார்.

இதுபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு விளையாட்டுப்போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றவர்களையும் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us