தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவகங்கை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வு நிலவரம்

சிவகங்கை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வு நிலவரம்

சிவகங்கை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வு நிலவரம்


UPDATED : டிச 17, 2014 12:00 AM

ADDED : டிச 17, 2014 12:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2014 12:00 AM ADDED : டிச 17, 2014 12:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இவர்களுக்கான எழுத்து தேர்வு டிச.21ல் நடக்கிறது. இதில், சிவகங்கை மாவட்டத்தில் 20,347 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

சிவகங்கை 27, தேவகோட்டை 6, இளையான்குடி 6, காரைக்குடி 14, மானாமதுரை 13, திருப்புத்தூரில் 6 தேர்வு அறைகள் என 72 தேர்வு அறைகள் தயார் நிலையில் உள்ளது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் வெப்கேமரா பொருத்தப்படும்.

தேர்வு கண்காணிப்பு பணியில் 72 முதன்மை கண்காணிப்பாளர், 72 ஆய்வு அலுவலர்கள், துணை கலெக்டர்கள் நிலையில் 14 பறக்கும் படை அதிகாரிகள், தாசில்தார் நிலையில் 14 நகர்வு குழுவினர் ஒட்டுமொத்தமாக மாவட்ட அளவில் 57 இடங்களில் தேர்வு நடக்கிறது.

தேர்வுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் ராஜாராமன், டி.ஆர்.ஓ., இளங்கோ, கலெக்டர் பி.ஏ.,(பொது) சக்திமணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தேர்வு எழுதுவோர்

சிவகங்கை  - 6,973
தேவகோட்டை - 1,937
இளையான்குடி - 1,520
காரைக்குடி - 4,117
மானாமதுரை - 4,185
திருப்புத்தூர் - 1,615
மொத்தம் - 20,347

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us