தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரமக்குடியில் டெங்கு காய்ச்சலால் 2 மாணவர்கள் பாதிப்பு

பரமக்குடியில் டெங்கு காய்ச்சலால் 2 மாணவர்கள் பாதிப்பு

பரமக்குடியில் டெங்கு காய்ச்சலால் 2 மாணவர்கள் பாதிப்பு


UPDATED : டிச 18, 2014 12:00 AM

ADDED : டிச 18, 2014 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2014 12:00 AM ADDED : டிச 18, 2014 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில்’டெங்கு’ காய்ச்சல் பரவுகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள மாதவன் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் திவாகர், 8. தனியார் பள்ளியின் 4 ம் வகுப்பு மாணவர். 4 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திவாகரை, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதேபோல் மதுரை, கீழ்மதுரை சி.எம்.ஆர்., ரோட்டைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சந்தோஷ், 6, அங்குள்ள பள்ளியில் 1 ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், தாயார் சரஸ்வதியுடன் பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.

மாணவர்கள் திவாகர், சந்தோஷ் ஆகியோரை பரமக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்ததில், ’டெங்கு’ காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us