முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு
UPDATED : டிச 18, 2014 12:00 AM
ADDED : டிச 18, 2014 11:43 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில், முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான, ’ஹால் டிக்கெட்’டை ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, நவ., 26ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
இதில், தேர்வு எழுத தகுதியானவர்களுக்கு, ’ஹால் டிக்கெட்’டை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து ’ஹால்டிக்கெட்’டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வு ஜன., 10ம் தேதி நடக்கிறது.
