தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்டக்டர் பணிக்கு வயது வரம்பை தளர்த்தி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

கண்டக்டர் பணிக்கு வயது வரம்பை தளர்த்தி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

கண்டக்டர் பணிக்கு வயது வரம்பை தளர்த்தி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


UPDATED : டிச 18, 2014 12:00 AM

ADDED : டிச 18, 2014 01:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2014 12:00 AM ADDED : டிச 18, 2014 01:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: காரைக்குடி கோட்ட அரசு போக்குவரத்துக் கழக, கண்டக்டர் பணி நேர்காணலில் பங்கேற்க வயது வரம்பை தளர்த்தி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட் டம், முதுகுளத்தூர் அருகே ஸ்வாதன் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி 41, தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். கண்டக்டர் பயிற்சி முடித்து, 1996ல், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். கடந்த 2001 - 06ல் வேலை நியமனத் தடைச் சட்டம் அமலில் இருந்தது. 2006ல் அச்சட்டம் நீக்கப்பட்டது.

வேலைவாய்ப்பில், வயது வரம்பில் சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டது. அரசு போக்குவரத்துக் கழகம், காரைக்குடி கோட்டத்தில் கண்டக்டர் பணி நேர்காணலில் பங்கேற்க, 35 வயது என, வரம்பு நிர்ணயித்து உள்ளனர். வயது வரம்பு தளர்த்திய உத்தரவை கருத்தில் கொள்ளவில்லை. எனவே, என் வயது வரம்பை தளர்த்தி, நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்.

மனுவை விசாரித்த, நீதிபதி டி.ராஜா, ’மனுதாரர் 35 வயதை கடந்துவிட்டார். வரும் 19ல் நேர்காணலில் மனுதாரரை அனுமதிக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us