தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு மாணவர்களின் நலன்கருதி புதிய மையம் அமைக்க கோரிக்கை

பொதுத்தேர்வு மாணவர்களின் நலன்கருதி புதிய மையம் அமைக்க கோரிக்கை

பொதுத்தேர்வு மாணவர்களின் நலன்கருதி புதிய மையம் அமைக்க கோரிக்கை


UPDATED : டிச 18, 2014 12:00 AM

ADDED : டிச 18, 2014 01:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2014 12:00 AM ADDED : டிச 18, 2014 01:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி: அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 22 கிலோ மீட்டர் தூரம் சென்று, பொதுத் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் அவர்களின் கல்வி நலன் கருதி, புதிய தேர்வு மையம் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வின் போது 18 கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதி வருகின்றனர். அதேபோல், அண்ணாமலைச்சேரி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 22 கி.மீ., தொலைவில் உள்ள, பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுகின்றனர்.

பேருந்து வசதி இல்லை

மாணவர்கள் தேர்வு எழுத, நீண்ட தூரம் செல்லும்போது உடல் ரீதியாக சோர்வு அடைந்து, தேர்வை சரியாக எழுத முடிவதில்லை. மேலும், கோளூர், அண்ணாமலைச்சேரி கிராமங்களில் இருந்து பொன்னேரி செல்ல, காலை நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லை. அவையும் குறித்த நேரத்தில் செல்வதில்லை என்பதால் மாணவர்கள் தேர்வு எழுத செல்லும்போது, பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கோரிக்கை

இந்த, 2014--15ம் கல்வியாண்டில், கோளூர் உயர்நிலைப் பள்ளியில் 90 மாணவர்கள், அண்ணாமலைச்சேரி உயர்நிலைப் பள்ளியில் 42 மாணவர்கள் என, மொத்தம் 132 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர். மேற்கண்ட மாணவர்களின் வசதிக்காக கோளூர் உயர்நிலைப் பள்ளியில், புதிய தேர்வு மையம் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து, கோளூர் அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் காளத்தி கூறுகையில், ’பொன்னேரி சென்று தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். கோளூர் பள்ளியில், புதிய தேர்வு மையம் அமைக்க கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளோம். அண்ணாமலைச்சேரி மாணவர்களும் 4 கி.மீ., பயணித்தால் போதும். இதனால் நேர விரயம், தேர்விற்கு படிக்க போதிய கால அவகாசம் கிடைக்கும்’ என்றார்.

அடுத்த ஆண்டில்...

இதுகுறித்து, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது: கோளூர், அண்ணாமலைச்சேரி இரண்டு பள்ளிகளையும் ஆய்வு செய்தோம். அங்கு போதுமான தேர்வு எழுதும் அறைகள் இல்லை. தற்போது, கோளூர் அரசுப் பள்ளியிலிருந்து, எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெதூர் அரசுப் பள்ளியில், புதிய தேர்வு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோளூர் அரசுப் பள்ளியில், புதிய கட்டடங்கள் அமையும் பட்சத்தில், அடுத்த கல்வியாண்டில் தேர்வு மையம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us