தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கபடியில் அசத்திவரும் மாணவிகள்!

கபடியில் அசத்திவரும் மாணவிகள்!

கபடியில் அசத்திவரும் மாணவிகள்!


UPDATED : டிச 19, 2014 12:00 AM

ADDED : டிச 19, 2014 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2014 12:00 AM ADDED : டிச 19, 2014 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கபடி... என்ற வார்த்தையை, மூச்சு விடாமல் சொல்லும் விளையாட்டு கபடி. சுற்றி வளைக்கும் வீரர்களுக்கு, டிமிக்கி கொடுத்து, அவர்களை வெளியேற்றுவதில் தனி சாமர்த்தியம் வேண்டும்.

எத்தகைய இறுகிய பிடியாக இருந்தாலும், அதிலிருந்து தப்பித்து, எல்லைக் கோட்டை தொடும்போது, எங்கிட்டேயேவா... என்ற வார்த்தை நிச்சயமாக மனசுக்குள் எதிரொலிக்கும்.

இந்த வீர விளையாட்டில், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சாதிப்போம் என்று சூளுரைத்து களமிறங்கியுள்ளனர், ரத்தினம் கல்லுாரி மாணவியர் இருவர். இறுதியாண்டு பி.காம்., சி.ஏ., படித்துக் கொண்டிருக்கின்றனர், சபரிமாலா, பவித்ரா. சமீபத்தில், கேரள மாநிலம் கண்ணுாரில் நடந்த தென்மண்டல அளவிலான போட்டியில், பாரதியார் பல்கலை சார்பில் பங்கேற்ற இவர்களது அணி, இரண்டாவது இடம் பிடித்தது. சூலுாரில் நடந்த மாநில அளவிலான கபடியிலும், தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை அட... போட வைத்துள்ளனர்.

சீனியர் பிரிவில், கல்லுாரிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். கோபியில் உள்ள பி.கே.ஆர்., கல்லுாரியில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆட்டத்தில், இவர்கள் பங்கேற்ற அணி, மூன்றாவது இடம்பிடித்தது. தொடர்ந்து, மாவட்ட, மாநில அளவிலும் வெற்றி பெற்று, கல்லுாரி நிர்வாகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். அகில இந்திய அளவில் ஒடிசாவில் நடக்கப் போகும் கபடிக்கு, தற்போதை தயார்படுத்திக்கொண்டு, சிறப்பு முகாமில் பங்கேற்றுள்ளனர்.

மாணவியர் சபரி மாலா, பவித்ரா கூறுகையில், "கபடி விளையாட்டு, எங்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. ஆட்டத்தில், பிடியின் இறுக்கத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாதிப்போம்" என்றனர், கோரஸாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us