இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு
UPDATED : டிச 22, 2014 12:00 AM
ADDED : டிச 22, 2014 12:17 PM
காரைக்குடி: சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம்) யு.ஜி.சி., இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
காரைக்குடியில் அழகப்பா இன்ஜி., கல்லூரி, மெட்ரிக்., பள்ளி, பாலிடெக்னிக், உமையாள் ராமநாதன் கல்லூரி, அழகப்பா அரசு கலை கல்லூரி உள்ளிட்ட 11 இடங்களில் தேர்வு நடந்தது. 5,749 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலை 9 மணி முதல் 12 மணி வரை, உயிர் அறிவியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியல் தேர்வும், மதியம் 2 மணிமுதல் 5 மணி வரை வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல், இன்ஜி., அறிவியல் பாடத்திற்கான தேர்வும் நடந்தது.
காலையில் நடந்த தேர்வுக்கு 2,851 பேர் விண்ணப்பித்ததில், 1,504 பேரும், மதியம் நடந்த தேர்வுக்கு 2,898 பேர் விண்ணப்பித்ததில், 1,609 பேரும் தேர்வு எழுதினர்.
