தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைக்கழக தடகள போட்டியில் 100 மீ., தடை ஓட்டத்தில் மாணவி சாதனை!

பல்கலைக்கழக தடகள போட்டியில் 100 மீ., தடை ஓட்டத்தில் மாணவி சாதனை!

பல்கலைக்கழக தடகள போட்டியில் 100 மீ., தடை ஓட்டத்தில் மாணவி சாதனை!


UPDATED : டிச 23, 2014 12:00 AM

ADDED : டிச 23, 2014 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2014 12:00 AM ADDED : டிச 23, 2014 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியமேடு: சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி மாணவி, 100 மீ., தடை ஓட்டத்தில் சாதனை புரிந்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின், உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை சார்பில், சென்னை பல்கலை தடகள போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 100 மீ., தடை ஓட்டத்தில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி மாணவி காயத்ரி, 13.07 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இரண்டாம் இடத்தை, தீபிகா பெற்றார். இதற்கு முன், அதே கல்லுாரி மாணவி பிரியா, 14 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்தது.

இதன்மூலம் காயத்ரி, ஒன்பது ஆண்டு சாதனையை நேற்று முறியடித்தார். ஆண்கள் பிரிவில், 5,000 மீ., நடை ஓட்டத்தில், யோகேஷ் (டி.பி., ஜெயின்) 16 நிமிடம், 30.4 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்தார். 400 மீ., தடை ஓட்டத்தில், தியாகராஜன் (எம்.சி.சி.,) 53.1 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். கோல் ஊன்றி தாண்டுதலில், சிவா (லயோலா) 4.52 மீ., உயரம் தாண்டி, முதலிடம் பிடித்தார். குண்டு எறிதலில், சரத்குமார் (லயோலா) 48.14 மீ., துாரம் எறிந்து, தங்கம் பெற்றார்.

800 மீ., ஓட்டத்தில், கோகுலகண்ணா (லயோலா) ஒரு நிமிடம், 56:2 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்தார். மும்முறை தாண்டுதலில், முகமத் சுபேர் (லயோலா) 15:31 மீ., துாரம் தாண்டி முதலிடம் பிடித்தார்.

பெண்கள்

5,000 மீ., நடை ஓட்டத் தில், தீபிகா (எத்திராஜ்) 22 நிமிடம், 36.8 வினாடிகளில் கடந்து, முதலிடம் பெற்றார். 400 மீ., தடை ஓட்டத்தில், வைஷ்ணவி (எத்திராஜ்) ஒரு நிமிடம், 5.3 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்தார். குண்டு எறிதலில், அன்செலோமா (எம்.சி.சி.,) 37.81 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்றார். 800 மீ., ஓட்ட பந்தயத்தில், பிரியா சோகா இகேடா, 2:16.3 வினாடிகளில் நடந்து தங்கம் பெற்றார். உயரம் தாண்டுதலில், லாவண்யா (எம்.ஓ.பி.,) 1.66 மீ., உயரம் தாண்டி, தங்கம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us