தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி கிராம திட்ட வரைவு

அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி கிராம திட்ட வரைவு

அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி கிராம திட்ட வரைவு


UPDATED : டிச 23, 2014 12:00 AM

ADDED : டிச 23, 2014 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2014 12:00 AM ADDED : டிச 23, 2014 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திகிராமம்: காந்திகிராம பல்கலை மாணவர்கள் தயாரித்துள்ள அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி கிராம திட்ட வரைவு, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

காந்திகிராம பல்கலை மாணவர்கள் கிராம சூழ்நிலையை அறிந்து கொள்ள இந்திய மொழிகள், சமூக அறிவியல், வேளாண்மை, கல்வியியல் உள்ளிட்ட துறைகள் சார்பில் கிராம பங்கேற்பு முகாம் நடந்தது. இதில் 800 மாணவர்கள் குழுவாக பிரிந்து திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டி, சிக்கனம்பட்டி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களில் ஒரு வாரம் தங்கினர்.

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்திட்ட பணிகளை மேற்கொண்டனர். மக்களின் வாழ்வாதாரம், இயற்கை வளம், சுற்றுச்சூழல், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, அரசு நலத்திட்டங்கள், தொழில் வாய்ப்பு, சுயஉதவி குழுக்களின் செயல்பாடு குறித்த தகவல்களை சேகரித்தனர். இதன்படி அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி கிராம திட்ட வரைவு தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறுகையில், "கிராம பங்கேற்பு முகாம் வேறு பல்கலைகளில் நடத்தப்படுவது இல்லை. மாதிரி கிராம திட்ட வரைவு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us