அண்ணா பல்கலை சார்பில் 6 மாத இலவச ஏசி மெக்கானிக் பயிற்சி வகுப்பு
அண்ணா பல்கலை சார்பில் 6 மாத இலவச ஏசி மெக்கானிக் பயிற்சி வகுப்பு
UPDATED : டிச 23, 2014 12:00 AM
ADDED : டிச 23, 2014 12:42 PM
சென்னை: அண்ணா பல்கலையின், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், ஆறு மாத இலவச, ஏசி மெக்கானிக் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: ஏசி மற்றும் பிரிஜ், பழுது பார்ப்பது தொடர்பான, ஆறு மாத தொழில்நுட்ப இலவச பயிற்சியை, அண்ணா பல்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் தென் சென்னை ரோட்டரி மையம் நடத்துகின்றன. படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அடிப்படையில் இடம் அளிக்கப்படும். 50 மாணவர் சேர்க்கப்படுவர். வகுப்புகள், அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கி, ஜூலையில் முடியும். திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை, அண்ணா பல்கலையில் நடக்கும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
