தடகள போட்டியில் எம்.ஓ.பி., ஸ்டெல்லா மேரி கல்லுரிகளுக்கு தங்கப் பதக்கம்
தடகள போட்டியில் எம்.ஓ.பி., ஸ்டெல்லா மேரி கல்லுரிகளுக்கு தங்கப் பதக்கம்
UPDATED : டிச 24, 2014 12:00 AM
ADDED : டிச 24, 2014 10:44 AM
பெரியமேடு: சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில், பெண்கள் பிரிவுகளில், எம்.ஓ.பி., ஸ்டெல்லா மேரி கல்லுரிகள் தங்கப் பதக்கம் வென்றன.
சென்னை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறை சார்பில், 47வது தடகள போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. ஆண்கள் பிரிவில், 10 ஆயிரம் மீ., போட்டியில், 34 நிமிடம், 33.3 வினாடிகளில் கடந்து, யோகஷ் (டி.பி., ஜெயின்) முதலிடம் பிடித்தார். 100 மீ., போட்டியில், 10.7 வினாடிகளில் கடந்து, அகஸ்டின் யேசுதாஸ் (லயோலா) முதலிடம் பெற்றார். 400 மீ., போட்டியில், 48.7 வினாடிகளில் கடந்து, மோகன்குமார் (டி.ஜி., வைஷ்ணவா) தங்கம் பெற்றார். குண்டு எறிதலில், 13.73 மீ., துாரம் எறிந்து, அருண்குமார் (லயோலா) முதலிடம் பிடித்தார்.
20 கி.மீ., நடை ஓட்டத்தில், ஒரு மணி, 57 நிமிடம், 57 வினாடிகளில் கடந்து, சஞ்சய் (லயோலா) தங்கம் பெற்றார். பெண்கள் பிரிவில், 10 ஆயிரம் மீ., போட்டியில், 42 நிமிடம், 44.2 வினாடிகளில் கடந்து, லட்சுமி (எம்.ஓ.பி.,) தங்கம் வென்றார். 400 மீ., போட்டியில், 55.7 வினாடிகளில் கடந்து, சவுந்தர்யா (எம்.ஓ.பி.,) தங்கம் பெற்றார். வட்டு எறிதலில், 37.32 மீ., துாரம் எறிந்து, நித்யா (எம்.ஓ.பி.,) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஈட்டி எறிதலில், 37.04 மீ., துாரம் எறிந்து, ஜோதிமணி (எம்.ஓ.பி.,) முதலிடம் பிடித்தார்.
குண்டு எறிதலில், 10.57மீ., துாரம் எறிந்து, மந்தரா (எம்.ஓ.பி.,) தங்கம் பெற்றார். 5 கி.மீ., நடை ஓட்டத்தில், 31 நிமிடம், 29.7 வினாடிகளில் கடந்து, அபிராமி (எம்.ஓ.பி.,) தங்கம் பெற்றார். முதல் போட்டியில், மும்முறை தாண்டு தலில், 12.35 மீ., துாரம் தாண்டி, ரோச்சல் மரியா மெக்பெர்லின் (ஸ்டெல்லா மேரி) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
