திருக்குறள் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
திருக்குறள் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : டிச 24, 2014 12:00 AM
ADDED : டிச 24, 2014 11:38 AM
பெரியகுளம்: தேனி மாவட்ட அளவில் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் போட்டியில் பங்கேற்க, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
தேனி மாவட்டம் முழுவதும் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்பிவித்தில் போட்டிகள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1330 ரூபாய் வழங்கி சிறப்பித்து வருகிறது.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, குறள் ஒப்புவித்தல் மற்றும் பேச்சு போட்டிகள் ஜன.,9 முதல் 11 வரை நடக்கிறது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் ஜன.,9,10 இரு தினங்கள் நடக்க உள்ளது. போட்டிகளில் பெயரை பதிவு செய்யும்போதும், பங்கு பெறும்போதும் பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் கையெப்பமிட்ட சான்றிதழ் வேண்டும்.
கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகளில் பங்கு பெறுவோர் தங்கள் பெயர்களை புலவர் மு.ராசரத்தினம், சர்வோதய சங்க கதர்கடை, மூன்றாந்தல், பெரியகுளம் என்ற முகவரிக்கு 2015 ஜன.,3 க்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என, தமிழ் இலக்கிய மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
