தெற்கு மண்டல அளவிலான கபடி போட்டியில் கோவை பள்ளி முதலிடம்
தெற்கு மண்டல அளவிலான கபடி போட்டியில் கோவை பள்ளி முதலிடம்
UPDATED : டிச 26, 2014 12:00 AM
ADDED : டிச 26, 2014 11:03 AM
அ நிறம் | அளவு
கோவை: தெற்கு மண்டல அளவிலான கபடி போட்டியில், கோவை, வி.எஸ். செங்கோட்டையா நினைவு உயர்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது.
தெற்கு மண்டல அளவிலான, பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி ஊட்டியில் நடந்தது. இதில், பல்வேறு மாவட்ட அனைத்து பள்ளிகள் கலந்துக் கொண்டன. மூத்தோர் பிரிவு இறுதி ஆட்டத்தில், கோவை, குறிச்சி செங்கோட்டையா நினைவு பள்ளி, முதலிடத்தை கைப்பற்றியது.
மேலும், கபடி குழு மாணவர்கள், 2015 ஜன., 4,5,6 தேதிகளில், புதுக்கோட்டையில் நடக்கவுள்ள குடியரசு தின விழா குழு போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை எல்லன் புஷ்பராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
