மேற்கூரை சேதமடைந்த அங்கன்வாடி மையம் - அச்சத்தில் குழந்தைகள்
மேற்கூரை சேதமடைந்த அங்கன்வாடி மையம் - அச்சத்தில் குழந்தைகள்
UPDATED : டிச 26, 2014 12:00 AM
ADDED : டிச 26, 2014 12:10 PM
அ நிறம் | அளவு
வருஷநாடு: வருஷநாடு அருகே சாந்திபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளது. இதனால் குழந்தைகள் அச்சத்தில் மையத்தில் இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியம், சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாந்திபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் படிக்கின்றனர். மையம் செயல்படும் கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை.
இதனால் மேற்கூரை பெயர்ந்து அவ்வப்போது விழுகிறது. இங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. சாந்திபுரம் அங்கன்வாடி மையத்தினை பராமரிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
