தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா

சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா

சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா


UPDATED : டிச 27, 2014 12:00 AM

ADDED : டிச 27, 2014 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2014 12:00 AM ADDED : டிச 27, 2014 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலியில், வட்டம்-2ல் உள்ள ‘சிநேகா வாய்ப்பு சேவைகள்’ என்ற சிறப்பு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, அமைப்பின் தலைவர் என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் மனைவி ஸ்வர்ணகுமாரி தலைமை தாங்கினார். என்.எல்.சி., இயக்குனர்கள் சரத்குமார் ஆச்சார்யா, ராகேஷ்குமார், பூபதி, சுபீர்தாஸ், என்.எல்.சி., பொது மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜனார்தன் மற்றும் டாக்டர் உஷா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சல்மா பிலிப் வரவேற்றார்.

விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு பரிசு வழங்கி என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் பேசுகையில், ‘என்.எல்.சி., நிறுவனம் நடத்தி வரும் சிநேகா பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் இன்று தங்கள் வாழ்வாதாரத்திற்கான பொருள் ஈட்டுமளவிற்கு உயர்ந்துள்ளது பெருமை அளிக்கிறது.

இப்பள்ளியில் என்.எல்.சி., பணியாளர்களின் குழந்தைகளுக்கு மட்மின்றி நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு குழந்தைகளுக்கும் இலவசமாக சிறப்பு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி., நிறுவனம் இவர்களது முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் சமூகப் பொறுப்புணர்வுடன் செய்ய தயாராக உள்ளது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us