தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காராத்தே போட்டியில் சாதிக்கும் 7ம் வகுப்பு மாணவி

காராத்தே போட்டியில் சாதிக்கும் 7ம் வகுப்பு மாணவி

காராத்தே போட்டியில் சாதிக்கும் 7ம் வகுப்பு மாணவி


UPDATED : டிச 27, 2014 12:00 AM

ADDED : டிச 27, 2014 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2014 12:00 AM ADDED : டிச 27, 2014 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி வர்ஷா, மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் முத்திரை பதித்து வருகிறார்.

திருப்பூர் காந்தி நகர், பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளி 7ம் வகுப்பு மாணவி வர்ஷா. கராத்தே கற்று வரும் இவர், குமித்தே, கட்டா பிரிவில் ஜொலித்து வருகிறார். பயிற்சியை துவக்கிய 2 ஆண்டுகளிலேயே, மாநில அளவில் பதக்கம் வென்று அசத்தினார். நடப்பாண்டில், தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்ற இவர், கட்டா பிரிவில் முதலிடம், குமித்தே பிரிவில் 2ம் இடம் பெற்றார்.

கேரளாவில் நடைபெற்ற, தேசிய அளவிலான கிரேடு போட்டியில், ‘பிரவுன் பெல்ட்’ பெற்றார். மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று, கேரளாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு, மாணவி வர்ஷா தகுதி பெற்றுள்ளார்.

அவர் கூறும்போது, “ஆசிரியர்களின் ஊக்கமும், பெற்றோரின் ஆதரவாலும் சாதிக்க முடிகிறது. மேலும் பல போட்டிகளில் பங்கேற்று, மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே விருப்பம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us