தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு


UPDATED : டிச 28, 2014 12:00 AM

ADDED : டிச 28, 2014 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2014 12:00 AM ADDED : டிச 28, 2014 11:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதில் மாணவர்கள் வருகையை பராமரிக்காத விடுதி காப்பாளர் அழகனை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தனக்கன்குளம் ஐ.டி.ஐ., மாணவிகள் தங்கும் விடுதி ரூ.71.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதை ஆய்வுசெய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார். திருப்பரங்குன்றத்தில் கல்லுாரி மாணவர்கள் விடுதியில் ஆய்வு செய்தபோது, தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக மாணவர்கள் புகார் கூறினர். அங்கிருந்து மேயர் ராஜன் செல்லப்பாவை தொடர்புகொண்டு, விடுதிக்கு உடனடியாக தண்ணீர் வசதி செய்து கொடுக்க கேட்டு கொண்டார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சோதித்தார். விடுதிக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க மாணவர்கள் வலியுறுத்தினர். மாடக்குளம் முதுகலை மாணவர் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர் விடுதிகளை ஆய்வு செய்தார். ஐ.டி.ஐ., விடுதியில் மாணவர்கள் வருகை பதிவேடு சரிவர பராமரிக்காதது, தரமான உணவு வழங்கப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதி காப்பாளர் அழகனை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us