மாணவர்களுக்கு, தேயிலை மற்றும் தேநீர் தொடர்பான போட்டிகள், பரிசுகள்
மாணவர்களுக்கு, தேயிலை மற்றும் தேநீர் தொடர்பான போட்டிகள், பரிசுகள்
UPDATED : டிச 28, 2014 12:00 AM
ADDED : டிச 28, 2014 11:57 AM
ஊட்டி: தேயிலை சுற்றுலா விழாவில், சிறப்பாக தேநீர் தயாரித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் தேயிலை சுற்றுலா வார விழாவின் 2வது நாளில், இன்கோ சர்வ், உபாசி உட்பட தனியார் எஸ்டேட்கள் தயாரித்த பிளாக் டீ, கிரீன் டீ, ஒயிட் டீ, ஆர்த்தோடக்ஸ், டஸ்ட் ரக தேயிலை வகைகள் மற்றும் சத்துணவு துறை சார்பில், பாரம்பரிய உணவு வகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றன.
இதில், கோத்தகிரி ஹில்போர்ட் பள்ளி மாணவியர் உட்பட பெண்கள் தேநீர் தயாரித்தனர். இதில், சிறப்பாக தேநீர் தயாரித்த சோபியா, சாருதி, ரிஷிகா, பார்வதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே, தேயிலை குறித்த வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பள்ளி மாணவியரின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. தேயிலை விளையும் நீலகிரியில் நடத்தப்பட்ட தேயிலை சுற்றுலா விழாவில், தேயிலை விவசாயிகள் இல்லாத நிலையில், பள்ளி மாணவ, மாணவியரே அதிகளவில் பங்கேற்றது பள்ளி விழா போன்று இருந்தது.
