தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஷிடிஜ் 2015 - ஒரு அற்புதமான டெக்னோ-மேனேஜ்மென்ட் திருவிழா!

ஷிடிஜ் 2015 - ஒரு அற்புதமான டெக்னோ-மேனேஜ்மென்ட் திருவிழா!

ஷிடிஜ் 2015 - ஒரு அற்புதமான டெக்னோ-மேனேஜ்மென்ட் திருவிழா!


UPDATED : டிச 29, 2014 12:00 AM

ADDED : டிச 29, 2014 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2014 12:00 AM ADDED : டிச 29, 2014 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 2004ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, தற்போது ஆசியாவின் மிகப்பெரிய டெக்னோ-மேனேஜ்மென்ட் திருவிழாவாக வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இந்த திருவிழாவில், இந்திய ரூபாயின்படி, 60 லட்சத்திற்கும் மேலான மதிப்புள்ள பணப் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, நாடெங்கிலுமுள்ள 1,400 கல்லூரிகளிலிருந்து 65,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதிலிருந்து, நாம் இந்த திருவிழாவின் பிரமாண்டத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த விழா, சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவிடமிருந்து மேலான ஆதரவையும் பெற்றுள்ளது.

பல்வேறு பகுதிகளிலிருந்து இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், ஆழ்ந்த மற்றும் பரந்த அறிவு, அபரிமிதமான வாய்ப்புகள், சிறந்த அனுபவங்கள் மற்றும் அவர்களின் வயதுக்கேயுரிய குதூகலத்தையும் பெற முடியும்.

பல்வேறு நிகழ்வுகள், நிபுணர்களின் உரைகள், ஒர்க்ஷாப்புகள்(workshops) மற்றும் கண்காட்சிகள்(exhibitions) ஆகியவை இவ்விழாவில் அடக்கம். கடந்தாண்டுகளின் ஷிடிஜ்(Kshitij) நிகழ்வுகளில், உலகளாவிய புகழ்பெற்ற நிறுவனங்களான ASME, IMechE, AIChE, ACM மற்றும் IEEE ஆகியவற்றின் சான்றிதழ்களைப் பெற்றுத்தந்த வெவ்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஷிடிஜ் 2014 -ல் இடம்பெற்ற பல நிகழ்வுகளில், மாணவர்கள், தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பல துறைகளில் தங்களின் அறிவை விரிவாக்க உதவியவையும் அடக்கம்.

மேலும், வீட்டிலிருந்தபடியே கலந்துகொள்ளும் வகையிலான ஆன்லைன் புரோகிராம்களும் இடம்பெற்றன.

சிறப்புரையாற்றும் நிபுணர்களாக, கடந்தாண்டுகளில், ஜிம்மி வேல்ஸ், ஜொனாதன் பார்மன், பிரபு சாவ்லா, அமிதாப கோஷ், நவாசுதீன் சித்திக் மற்றும் நசிருதீன் ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

2015ம் ஆண்டு திருவிழாவில், Mozilla, Honda, NVIDIA, IBM, Texas போன்ற நிறுவனங்கள் கலந்துகொள்ளும் இலவச ஒர்க்ஷாப்புகளும் உண்டு.

2015 திருவிழாவில் நடக்கும் கண்காட்சிகளின் மூலமாக, உலகில் நடைபெற்றுள்ள சமீபத்திய விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்பது மாணவர்களுக்கான ஒரு பெரிய வரப்பிரசாதம்!

ஷிடிஜ் - 2015 விழாவில், கடந்தாண்டுகளோடு ஒப்பிடுகையில், பல புதிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அவை, கேஸ் ஸ்டடி பகுப்பாய்வு, நிதி திட்டமிடல், சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பல்வேறான அம்சங்கள் தொடர்பானவை.

மேலும், Kronicle என்ற பெயரில், ஷிடிஜ் - 2015க்கான அதிகாரப்பூர்வ வலைப்பக்கமும்(blog) உருவாக்கப்பட்டுள்ளது.

Kshitij - 2015 திருவிழா தொடர்பாக மேலும் பல தகவல்களை அறியவும், அதன் நிகழ்வுகளுக்காக பதிவுசெய்யவும் www.ktj.in என்ற வலைதளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us