தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்

தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்

தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்


UPDATED : டிச 30, 2014 12:00 AM

ADDED : டிச 30, 2014 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2014 12:00 AM ADDED : டிச 30, 2014 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தேசிய விளையாட்டு போட்டிகளில், திருப்பூர் மாவட்டம் சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற மாணவ, மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று, சாதித்து வருகின்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிசுத்தொகை வழங்குகிறது. திருப்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 2013-14ம் ஆண்டுக்கான தேசியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசு பெற்றவர்கள் விவரம்: தேசிய அளவில், மண்டலங்களுக்கு இடையேயான, ஜூனியர் தடகளம் 400 மீ., ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் மாணவன் தருண் முதலிடம் பெற்றார். சின்னசாமியம்மாள் மாணவன் வெங்கடேஷ், தேசிய அளவிலான ஜூனியர் பால் பேட்மின்டன் போட்டியில், தங்கம் வென்றார். சுப்பையா மாணவி காயத்ரி, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய தேசிய செஸ் போட்டியில், முதலிடம் பெற்று, தங்கம் பெற்றார்.

சாரதா வித்யாலயா மாணவி வைஷ்ணவி, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய யோகா போட்டியில், 2ம் இடம் பெற்றார். பிரண்ட்லைன் மாணவி பிரியங்கா பங்கேற்ற அணி, தேசிய கூடைப்பந்து போட்டியில் 3ம் இடம் பிடித்தது. பாரத் பள்ளி மாணவியர் நந்தினி, மதுமிதா ஆகியோர் பங்கேற்ற அணி, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய, தேசிய த்ரோபால் போட்டியில், 3ம் இடத்தை வென்றது.

இம்மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பரிசுக்கான காசோலையை, கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார். முதல் பரிசு 6,000 ரூபாய், 2ம் பரிசு 4,000 ரூபாய், 3ம் பரிசு 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us