தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் சிறப்பிடம்

கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் சிறப்பிடம்

கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் சிறப்பிடம்


UPDATED : டிச 30, 2014 12:00 AM

ADDED : டிச 30, 2014 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2014 12:00 AM ADDED : டிச 30, 2014 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மாவட்ட அளவில் நடந்த கணித திறனறி போட்டியில், மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆறு பேர் சிறப்பிடம் பெற்றனர்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், கோவையில் மண்டல அறிவியல் மையத்தில் கணித திறனறி போட்டி நடந்தது. 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும், 5 முதல் 8ம் வகுப்பு பயிலும், 560 மாணவர்கள் பங்கேற்றனர்.

சிறுமுகையை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் சுபானு, காருண்யா, கீர்த்தனா, திவ்ய தர்ஷினி, மாணவர்கள் லோகேஸ்வரன், ஜவஹர் ஆகிய ஆறு பேர் சிறப்பிடம் பெற்று பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவை மண்டல அறிவியல் மைய திட்ட இயக்குநர் அழகிரிசாமிராஜா, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப மைய இயக்குனர் குமார், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் ஐயம்பெருமாள், பெரியார் அறிவியல் மைய டாக்டர் சீனிவாசன் ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us