பாலிடெக்னிக் வாரிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை
பாலிடெக்னிக் வாரிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை
UPDATED : டிச 31, 2014 12:00 AM
ADDED : டிச 31, 2014 11:42 AM
கோபி: பாலிடெக்னிக் வாரிய தேர்வில் கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த அக்., நடந்த பாலிடெக்னிக் வாரிய தேர்வில் கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னணுவியல் துறை மாணவர் விஷ்ணுகுமார், 700க்கு 693 மார்க் பெற்று கல்லூரியில் முதலிடத்தையும், ஜானகிராமான் இயந்திரவியலில், 688 மார்க் பெற்று இரண்டாமிடத்தையும். மாணவன் ஹரிஹரன் மின்னனுவியல், 679 மார்க் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றார்.
முதலாம் ஆண்டு மாணவன் கருப்புசாமி, 800க்கு 707 மார்க் பெற்று முதல் இடத்தை பெற்றார். மாணவி திவ்யபாரதி சிவில் பாடத்தில், 700க்கு 571 மார்க் பெற்று முதலிடத்தையும், ஜானகிராமன் மெக்கானிக்கல் பிரிவில், 688 மார்க் பெற்று முதலிடத்தையும், மின்னனுவியல் துறையில் மாணவன் ஜான்வெஸ்லி, 663 மார்க் முதலிடமும், விஷ்ணுகுமார், 693 முதலிடமும், கணணியில் கவுசல்யா, 616 மார்க் பெற்று முதலிடத்தையும் பெற்றார்.
