தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டி நிறைவு விழா
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டி நிறைவு விழா
UPDATED : டிச 31, 2014 12:00 AM
ADDED : டிச 31, 2014 11:59 AM
விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லூரியில் தென் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நடந்தது.
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆண்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள், மயிலம் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர்கள் முதலிடம் பிடித்து கோப்பையை பெற்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், கேரளா பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் நான்காமிடத்தையும் பெற்றன.
அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத்துறை தலைவர் அறிவொளி, செயலாளர் சுந்தரராஜன், விளையாட்டுத்துறை இணை இயக்குனர் பலராமன், கல்லூரி டீன் ராஜப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை உடற்கல்வி இயக்குனர் செந்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். உடற்கல்வி இயக்குனர் வேல்முருகன் நன்றி கூறினார்.
